தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தொன்பதாம் அதிகாரம்.
மனோவுருவகம்.
|
6.
|
நம்பதியைக் கூட்டுவிக்க நம்மோ டுழுவல்செய்
இம்மனம் நந்தோழி யெண்.
|
286.
|
|
|
|
|
குறள் விளக்கம்.
கடவுள் தலைவனாகவும், அவரை அடைந்து கூடிவாழ இருக்கும் சீவான்மா தலைவியாகவும் விளங்குவதாம். இச் சீவான்ம சக்தியாகிய உணர்வே மனம். இதுவே உற்ற தோழியாய் உதவிக் கடவுளுடைய சம்பந்தத்தைப் பெறச் செய்யும்.
இம்மனிதப் பிறப்பில், மன அறிவுச் சக்தியால் உள்ள ஒன்று, சீவான்ம உணர்வுச் சக்தியாய் ஏழேழ் பிறப்பினும் தொடர்ந்து வந்து உதவிக் கொண்டே உள்ளதாம். இதனால் நம் மனத் தோழி உழுவல் செய்வதாக உரைக்கப்பட்டது.
உழுவல் என்றால் ஏழ் பிறவியிலும் தொடரும் அன்பு என்பர்.
Write a comment