Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.279

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தெட்டாம் அதிகாரம்.
மனோ சக்தி.

9.
ஞானவிசா ரத்தாலுண் ணாதரடி பற்றிநின்(று)
ஊனவிசா ரத்தை யொழி.
279.

குறள் விளக்கம்.
மனோ சக்தியைக் கொண்டு சத்விசாரம் செய்து, சுத்த பரம்பொருளின் திருவடியைக் கண்டு பற்றிக் கொள்ள வேண்டும். இப்படித் திருவடிப் பற்று கொண்டு வாழ்ந்தால் தான், ஊன் உடம்பின் விசாரம் (துக்கம் நிறை துன்ப வாழ்வு) ஒழியும். இன்ப வாழ்வு ஓங்கும்.