Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்.278.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தெட்டாம் அதிகாரம்.
மனோ சக்தி.

8.
பத்திமன வோர்மையினாற் பற்பலவே சித்திக்கும்
சுத்தமனத் தார்க்கே சுகம்.
278.

குறள் விளக்கம்.
மன ஓர்மையோடு கூடிய தீவிர பக்தியினாலே, இஷ்ட காமியார்த்த சித்திகள் அநேகம் பெறலாம். இதில் மனோசக்தியே பக்தியின் ஆற்றலாக வெளிப்படுவதாம்.
சுத்த தயவு இல்லாத போது, பக்தி முயற்சியால் பெறுகின்ற சித்திகள் யாவும் பேரின்பம் தரா. சுத்த மனத்தில் சுடர் விடும் தயா பெருஞ்சக்தியால் சித்திப்பதே பேரின்பப் பெரும் சுக வாழ்வு ஆகும்.