Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.268.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தேழாம் அதிகாரம்.

8.
கோபத்தைக் கோபித்துக் கொள்ளாதே சூழ்நரைக்
கோபித்தல் அஞ்ஞானக் கூறு.
268.

குறள் விளக்கம்.
மூட மனம் உண்மையை அறியாததினால், மனிதனை பிறர்மீது கோபமடையத் தூண்டுகின்றது. இந்த அறியாமையை ஒழித்த அறிஞர்கள் தயவுடன் எவரையும் நோக்கி, அவர்களின் மேல் குற்றம் குறை கண்டு வெகுளாது, தம் மனோ கரணத்தையே ஒறுத்து, திருத்திக் கொண்டு, அமைதியுடனும் அன்புடன் சூழ்கின்றவர்களோடு பழகுவர்.