தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தேழாம் அதிகாரம்.
மனவொறுப்பு
|
7.
|
பாசிவிலக் காக்காற் பளிங்குநீர் தோற்றுமோ
தேசுமனத் துண்மை தெளி.
|
267.
|
குறள் விளக்கம்.
பச்சைப் பசேல் என்று பாசி மூடிக் கிடக்கும் குளத்தில் அப்பாசத்தை விலக்கி விட்டுப் பார்த்தால், கீழே சுத்தமான தண்ணீர் இருப்பது தெரியும். முதலில் இந்த நல்ல நீர் தெரியாது. பாசியை ஒதுக்கின போதுதான் தெரிகின்றது.
அதுபோல, பாசத்தில் உழலும் மூட மனத்தில் ஆபாசமே தோன்றினும் தயா ஞானத்தால், அப் பாசத்தை விலக்கி, உள்நோக்கும் போது, கடவுள் உண்மை சக்தி ஒளி விடுவதை அறிந்து கொள்ளலாம்.
குளத்து நீரை மூடிய பாசத்தை கையால் விலக்கினால், மறுபடியும் சிறிது நேரத்தில் வந்து மூடிவிடும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துவிட்டால், எப்போதும் சுத்த நீரைக் காணலாகும்.
இதுபோன்று மனோ பாசத்தையும் ஒறுத்து ஒறுத்து முற்றும் களைந்து எறிந்து விட்டால் தான் உள் விளங்கும் கடவுள் நீர்மை என்றும் கண்டு நிற்போம்.
Write a comment