Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்.எண்.266.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தேழாம் அதிகாரம்.
மனவொறுப்பு

5.
மனத்திற் கடிமையாய் வாழ்ந்தழியும் மக்கள்
மனத்தொறுப்பாற் காண்பர் மதி.
265.

குறள் விளக்கம்.
மனத்தினை கடிந்து தன் வழிக்குக் கொண்டு வந்து உயர்ஞான நிலைக்கண் ஏறி, மெய்ப்பொருளை அடைய வேண்டியது, திருவருள் ஆணை.
அப்படிச் செய்யாது மனம் இழுத்த இழுப்பிற்கு இணங்கி புலனெறியில் சென்று உழன்று, பிழைத்து ஒழிவது அறிவுடைமை ஆகாது. மனத்திற்கு அடிமைப்பட்டு, அதன் போக்குக்கு உடன்பட்டுச் சென்றால் மூடமும் துன்பமும் உண்டாகும்.
மனத்தை அடிமையாக்கிக் கொண்டு நம் தயா நெறிக்கு உடன் இட்டுச் சென்றால், வாழ்வில் ஆன்ம இன்ப லாபம் சித்திக்கும்.