தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தேழாம் அதிகாரம்.
மனவொறுப்பு
|
4.
|
ஆசைபட் டொன்றை யடையாக்கா னோகுறும்
மாசுளத்தைப் பண்பில் மலர்த்து.
|
264.
|
குறள் விளக்கம்.
ஒரு பொருளை அடைய மிக விரும்பி முயன்றும் கிடைக்காத போது, மனம் வேதனைப் படுகின்றது. இந்த மனத்தைத் தான் ஒறுத்தல் வேண்டும்.
ஏனெனில் நமக்கு வேண்டியது எதுவோ, எப்பொழுதோ, அதனை அறிந்து அப்பொழுது அருள்வதே நமது வள்ளலின் பெருங்கருணையாகும். ஆதலின் மனத்து அவா அடக்கி திருவருளை நினைந்து நன்முயற்சி செய்து கொண்டிருப்பதே நல்லது.
மாறுபட்ட மனத்தை மறுத்துப் பொறுமை மேற்கொள்ளச் செய்தால், இந் நற்பண்பினால் அகமலர்ந்து அருள் மணம் வீசும்.
Write a comment