தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தேழாம் அதிகாரம்.
மனவொறுப்பு
|
1
|
புலனெறியிற் பாய்ந்தோடு புன்மனத்தை மேன்மேல்
நலமுற மன்னொறுத்தல் நன்று.
|
261.
|
குறள் விளக்கம்.
சுத்த தயவினால் மன அமைதியுற்று ஆனந்த அனுபவம் உற வேண்டி முன்னதிகாரம் கூறப்பட்டது. அம்மனம் அமைதியுறாது அபக்குவத்தால் அடிக்கடி சலனப்படும்போது அதனை வைது, திருத்தி அடக்கியாளவே இவ்வதிகாரம் தொடரப் பெறுகின்றதாம்.
ஒறுப்பு = கடிதல், கோபித்தல் முதலான செயல்.
புலனின்பத்தை நாடி அடிக்கடி ஓடி அலையும் மனம் புன்மையுடையதாம். அதாவது அற்பத் தன்மையுடையதாம். அப்படி உழலாது நின்று நலமடையவே அப்படி அதனைக் கடிந்து இடித்துக் கூறி நல்வழிப்படுத்தி நன்னிலையுறச் செய்தல் வேண்டும்.
மன் = மிக.
Write a comment