Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்.எண்.259.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தாறாம் அத்தியாயம்
மனவமைதி.

9.
விமல தயைநின்று வேண்டாமை யாலே
நமன மடையுந் நலம்.
259

குறள் விளக்கம்.
விமலம் = மலமற்றது, சுத்தமானது.
நமலம் = நம் மனம்
வேண்டாமை = எதையும் வேண்டும் என்று விரும்பாதிருத்தல்.
அன்றியும், விரும்பாத ஒன்று வரும்போதும், அதனை வேண்டாம் என்று மறுக்காததிருத்தலுமாம்.
திருவருள் வழங்கும் எதையும் விருப்பு, வெறுப்பு அற்று, ஏற்று, தயா இன்பம் பெருக மன அமைதியுடன் வாழ்வதே நலம்.
வேண்டாமை என்னும் நிறை குணம் எய்தியிருப்பின் வாராத ஒன்றை இச்சித்து வருந்துவதும் வருகின்ற ஒன்றை வெறுத்து ஒதுக்குவதும் செய்யாது தயவுப்பணிக்கு துணையாகக் கொண்டு வாழலாகும்.
“வேண்டாமை யன்ன விழிச்செல்வ மீண்டில்லை
யாண்டு மஃதொப்ப தில்” என்பது திருக்குறள்.
தினம் ஒரு தயவுக்குறள்.எண்.259.

தினம் ஒரு தயவுக்குறள்.எண்.259.