Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.257.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தாறாம் அத்தியாயம்.
மனவமைதி.

7.
மனத்துக்கண் ஆவலறில் மன்னுமலை வற்றி
தனைத்தினு மிக்க அறம்.
257.

குறள் விளக்கம்.
மனத்திலே ஆசையாகிய பெரு விருப்பு நீங்கி ஒழியுமானால், அம் மனம் அலைவற்று மன்னும். இப்படி மனம் சாந்தியுற்று நிலைத்தலே யாவற்றிலும் சிறந்த அறமாம்.
அறமாவது தருமம் குணம், தன்மை என்ப. இது ஆன்மாவுக்குரிய கடவுள் இயற்கைத் தன்மையாகிய சுத்த அருள் அல்லது தயவேயாம். இத் தயவில் பற்றுண்டாகி அவா நசையுறும்போதுதான் மனம் அலைவற்று மன்னுவது. இதுவே யாவருக்கும் உரிய அருள் நெறி.
மன்னும் அலைவற்று = (அலைவற்று மன்னும்), மனம் உள் ஒன்றி நிலைக்கும் என்பதாம்.