தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தாறாம் அத்தியாயம்.
மனவமைதி.
|
5.
|
தனக்குவமை யில்லான் தயைபெற்றார்க் காரும்
மனக்கவலை மாற்றும் வகை.
|
255,
|
குறள் விளக்கம்.
ஒப்புவமை இல்லாத உத்தமத் தலைவனாகிய பதியின் தயவைப் பெற்றவர்களுக்கு அல்லாது, மனக்கவலை முற்றும் ஒழிப்பது முடியாதாம். எனவே உண்மையாக மனக்கவலையை தீர்க்கும் வழிவகையெல்லாம் கடவுள் தயவை அடைவதாலே உண்டாகும் என்று அறியவேண்டும்.
இக் கடவுள் தயவு அடைவதற்கு சீவ தயவு மேற்கொண்டு உயிர்கட்கு உள்ளும் புறமும் விளக்கம் செய்தல் வேண்டும். இச் செயல் புரிவதால், மனத்தில் அமைதி நிலவும்.
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.255.
Write a comment