Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.252.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தாறாம் அத்தியாயம்.
மனவமைதி.

2.
மனவமைதிக் கண்ணே மலரு மருந்து
தினமேற்றார் பெற்றார் திடம்.
252.

குறள் விளக்கம்.
தயா ஒழுக்க வாழ்க்கையில் ஓர்மை மிக மிக மனத்தில் சலனமற்ற அமைதியும் தெய்வீக சக்தியும் ஓங்கும். இத் தெய்வ சக்தியே (மருந்தாக) அமிர்தமாக உள்ளதால் இதனை தினமும் சாதனையினால் பெருக்கிக் கொண்டு வர உடலுக்கும் உயிருக்கும் நோயின்மையும் ஆற்றலும் தந்து வாழ்விக்கும்.
தயவில்லாது பெரும் ஒருமை சக்தி மட்டும் கொண்டு, அடைகின்ற எவ்விதமான யோகானுபவ சித்திகளும் கடவுள் விதி முன் ஞாயிறு கண்ட பனி என மறைந்து போம்.
தினம் ஒரு தயவுக்குறள் எண்.252.

தினம் ஒரு தயவுக்குறள் எண்.252.