Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.246.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்து ஐந்தாம் அத்தியாயம்.
உவகை.

6.
தயவில்லாப் பத்தி தழைத்த பலமார்க்கத்(து)
அயலிருக்கும் இன்ப அருள்.
246.

குறள் விளக்கம்
எல்லோரிடத்தும் பொது நோக்கோடு செலுத்தும் தயவுதான் சன்கார்க்கத்தால் வழங்கப்படுவது. இந்நெறி பற்றிச் செல்வோரே கடவுளின் பேரருளுக்குப் பாத்திரமாவார்கள். அவர்க்கே பேரின்ப உவகையும் சித்திப்பதாம்.
மற்ற தயவு குன்றிய மத மார்க்கங்களில் செல்வோர், அருள் இன்ப எல்லை அருகிலும் செல்லக் கூடாது விலக்கப் பட்டிருக்கின்றனர். ஆதலின், இவர்கள் பொருந்தும் மத மார்க்க வாழ்வெல்லாம் ஒருதலைச் சார்பாகிய சிறு பக்தியினால் சிறு பயன் தந்து ஒழியும்.