Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்-245

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.
இருபத்து ஐந்தாம் அத்தியாயம்.
உவகை.

5.
சகலசெல்வ யோகமிக்கத் தாரணி வாழ்வில்
மிகமகிழ்தல் பொன்றும் விளிந்து.
245.

குறள் விளக்கம்.
பொருட் செல்வமும் மற்ற உலகியல் இன்ப நிறை வாழ்வும் கொண்டு பெரு மகிழ்ச்சியில் மூழ்கி இருத்தல் நிலையான வாழ்வல்ல. அது அழிந்து ஒழிந்து போகும்.
இத்தாரணி வாழ்வு பற்றி மயங்கிடார் மெய்யறிவுடையோர், அருட்செல்வமும், அகநிறை பேரின்பமும் பெற்று வாழ்தலே உவகை வாழ்வாம்.
பொன்றும் விளிந்து = விளிந்து பொன்றும் = இறந்து ஒழியும்.