தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்து ஐந்தாம் அத்தியாயம்.
உவகை.
|
4.
|
இரண்டேகாற் கைதந்த ஈசன் நமக்கு
இரண்டேகாற் கைதருவான் இன்று
|
244.
|
குறள் விளக்கம்.
இப்பிறப்பில் அருள் அறிவும், அதனால் அறிதற்கரிய, கற்பனை கடந்த, கடவுள் திருவடி ஞானமும் வழங்கப் பெற்றுள்ளோம். இது கொண்டு சுத்த அருள் மார்க்கத்தால், பேரின்பமாகிய பெருவாழ்வு அடைய வேண்டும் என்பதே நம் பதியின் திருவுள்ளமாகவும், நமது குறிக்கோளாகவும் இருப்பது அறிந்து கொள்ளப் படுகின்றது.
இரண்டேகால் கைதந்த ஈசன் = உபயபதமாகிய துணை அடிகளை, நமது அறிவனுபவத்தில் சத்விசாரத்தால் காணச் செய்துள்ள நம்பதி.
இரண்டே கால் கை தருவான் = (இரண்டு = உ, கால் = வ)+கை உவகை = பேரின்பம் வழங்குவான் என்பதாம்.
இது பரோபகாரத்தால் பெறுவதாம்.
திருவடி ஞானத்தை இன்று அளித்துள்ள நம் பதி, திருமுடியாகிய பேரின்ப வாழ்வையும் வழங்க உள்ளார் என்பது இக்குறளின் கருத்து.
Write a comment