Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.243.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்து ஐந்தாம் அத்தியாயம்.
உவகை.

3.
பொறிவாயி லைந்தின் புணர்ந்துள் மயங்கி
வெறியயர்தல் இன்போ விளம்பு
243.

குறள் விளக்கம்.
புலனிச்சை கொண்டு ஐம்பொறி வாயில் நுகரும் இன்பானுபவம் அக உண்மையை மறைத்துப் பின்னர் தளர்ச்சியும் கேடும் விளைவிக்கும். ஆதலின். அந்த இன்பம் இன்பமா ? சிற்றின்பமா ? பொய் இன்பமா ? அன்றி துன்பமா ?
பொறிவாயில் யாரும் மயங்கித் துய்க்கின்ற இன்பானுபவம் எல்லாம் உண்மையல்ல. வெறி கொண்ட ஆட்டமேயாம். ஆதலின், இந்நிலையை உவகை மெய்ப்பாட்டின் பயன் எனக் கருதிப் பற்றுதல் கூடாதாம்.
பொறிவாயில் ஐந்தின் பொய்தீர் ஒழுக்கமாகிய தயாநெறியினின்று சுத்த இன்பானுபவத்தை அடைவதே உண்மை உவகை.