Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.242

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்து ஐந்தாம் அத்தியாயம்.
உவகை.

2.
கலையீ னுவகை கழியுந் தயவான்
நிலையாய இன்பநிலை நில்.
242.

குறள் விளக்கம்:
புலன் இன்பானுபவத்தைத் தரும் கலைகள் பற்று வைக்கத் தருவனவல்ல. ஏனெனில் அவ்வின்பம், நிலையானதல்ல, சிறிது காலத்தில் மறைந்து போகும்.
ஆகையால், ஆன்ம நெகிழ்ச்சியால் தயவுடன் பயின்று தோற்றுகின்ற ஆனந்தானுபவமே நிலைத்திருப்பது எனக் கண்டு அதினின்று நழுவாது நிற்றல் வேண்டும்.
எவ்வளவு காலம், எவ்வளவு முயற்சி செய்தும் கலைச்சக்தியால் பெறற்கரிய இன்ப நிலை, அகங்காரம் அற்றுத் தயா வண்ணமானால் இமைப் பொழுதில் திருவருள் கூட்டி வைக்கும்.