Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.241.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்து ஐந்தாம் அத்தியாயம்.
உவகை.

1
உளநிறை வெய்த வுவகை தருமே
பளகிலா அன்பர் பணி.
241.

குறள் விளக்கம்:
வெகுளி தோன்றாத இடத்து, உள்ளத்தில் அமைதியும், பரோபகார சித்தமும் உண்டாகிப் புறத்தே செயல்பட மனத்தில் மகிழ்வும், நிறைவும் தோன்றுகின்றன.
இந்த நிறை மகிழ்வே உவகையாக உரைக்கப்படும். ஆதலின் இவ்வதிகாரம் வெகுளிக்குப் பின் வந்துள்ளது. உள்ளும் புறமும் மகிழ்வும் நிறைவும்க் தோற்றுவிப்பதே இம்மெய்ப்பாட்டின் பயன்
பளகு = குற்றம், குற்றமற்ற அன்புப் பணி செய்யச் செய்யத்தான் உள்ளத்தில் தூய்மையும், மகிழ்வும் நிரம்பும், உள்ளத்தில் உவகை உண்டானால், மன நிறைவு பெற்றால் வீணாசையும் விருப்பு வெறுப்பும் நீங்கி அமைதியும் இன்பமும் நிலைக்கும்.