தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்து நான்காம் அதிகாரம்
வெகுளி
|
9.
|
சேயி லுரைப்பர் திருநெறி யோர்மற்றோர்
நாயிற் குரைப்பர் நவை.
|
239
|
குறள் விளக்கம்
திருநெறி என்பது, தெய்வ தயவுத் தன்மையாகிய தயா மார்க்கமாம். இந் நெறி ஒழுகுபவர்கள், பிறரைத் தம் குழந்தை போல் பாவித்து, அவர்க்கு வேண்டிய நல்லனவற்றைக் கூறி, அல்லனவற்றைத் தடை செய்து நலம் பெறவே உதவுவர்.
மற்றோராகிய அன்பு இல்லாதவர்கள் பிறர் மேல் தயவும் பற்றுதலும் இன்றி நாயைப் போல வள் வள்ளென்று சீறி விழுவர். இப்படித் தயவின்றிக் குரைப்பது போல் உரைப்பது வெகுளி மெய்ப்பாட்டின் குறியே. இது அக நிலையைக் குலைத்து தீங்கு செய்வதால் நவை (குற்றம்) உடையதாம்.
Write a comment