தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்து நான்காம் அதிகாரம்
வெகுளி
|
7.
|
உயிருய ரின்புற வோவா துஞற்று
செயிரறு காட்சியுட் சேர்ந்து.
|
237
|
குறள் விளக்கம்
அகத்தே அருட்பதி நின்று, எவ்வுயிரும் பேரின்ப நிலை அடைய எல்லாம் வழங்கிக் கொண்டே யுள்ளார். இப்பதியனுபவம் பெறற்கு நாமும், மேற்படி கடவுள் அருட் செயலுண்மையை உள்ளவாறு அறிந்து, உட்கூடி நின்று, புறத்தே இடையறாது தயவுச் செயலால் பிற உயிர்க்கு நலம் செய்தல் வேண்டும்.
அகத்தே கண்டு கொண்ட அருள் உண்மைக் காட்சியே செயிரு (கோபம், போர்) ஆகிய குற்றத்தை ஒழிப்பதாம்.
ஓவாது = நீங்காது, இடையறாது.
உஞற்றுதல் = செய்தல், முயன்று புரிதலாம்.
Write a comment