தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்து நான்காம் அதிகாரம்
வெகுளி
|
6.
|
முனியா தெவரையும் மூவாத் தயவா
வினிதாக வாழற் கிசை.
|
236
|
குறள் விளக்கம்
பிறரைக் கோபியாது இரங்கி அன்பு செய்து இன்ப வாழ்வு அடைவித்தல் வேண்டும். முதலில் மனத்தின் கண் வெறுப்பு, சினம், எழாது தயா உணர்வை வருவித்துக் கொண்டால், புறத்தே காணும் குற்றம், குறைகளினிடத்து, ஆன்ம நெகிச்சியால் அன்பு உண்டாகுமே அல்லாது, முனிவும் பழிகூறலும் உண்டாகா.
தயவு ஒன்றே கடவுள் தொடர்பால் மூவா (அழியா) தன்மை கொண்டு எல்லோரையும் இன்ப வாழ்வில் ஏற்றுவதால் இத்தயா நெறியை யாவரும் மேற்கொள்ளல் நலமாம்.
Write a comment