தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்து நான்காம் அதிகாரம்
வெகுளி
|
5.
|
பொறுத்துத் திருத்திப் புரையற் றிலக
வொறுத்தலும் வேண்டு முடன்.
|
235
|
குறள் விளக்கம்
பிறர் செயலில் குற்றம் குறை இருப்பின், வெகுளாது சகித்து, எடுத்துத் திருத்திச் சரி செய்து வாழ்விக்க முயல வேண்டும். நம் சொல்லை ஏற்பவராயின் நல்லுரையைக் கடிந்து சொல்லுதலும் வேண்டும். அதுவும் உடனுக்குடன் செய்வதே நன்று.
நம் பேச்சை ஏற்காதவராயின், எதிர்ப்பவராயின், அவர்தம் குறையைக் கண்டு, அன்போடு உள நெகிழ்ந்து, அக்குறை நீங்கத்தக்க அறிவு தர, தயாபதி யிடத்தில் விண்ணப்பித்துக் கொள்ளல் வேண்டும்.,
ஒறுத்தல் = கடிந்து சொல்லுதல்.
Write a comment