தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்து நான்காம் அதிகாரம்
வெகுளி
|
3.
|
சினங்காவாச் சீர்கெட்ட திண்ணியரா லெங்குந்
தினம்போராற் காணுஞ் சிதைவு.
|
233
|
குறள் விளக்கம்
உள்ளத்தில் சினம் காத்தல் வேண்டும். அதாவது சினம் உள்ளத்தில் சேராதபடி தடுத்திடல் வேண்டும். அச்சினம், பற்றும்தோறும் பற்றும்தோறும் உள நிறைந்த தயவுநீரால் அணையச் செய்தல் வேண்டும்.
உள்ளத்தில் சினம் என்னும் சிறு நெருப்புக்கு இடங்கொடுக்கும் கடின சித்தர்களால், புறத்தே பெரு நெருப்பு உண்டாகி உலகம் சதா எரிந்து சிதைக்கப் படுகின்றதாம்.
வெகுளி காரணமாகவே மனித சமூகம், வல்ல அசுரத்தன்மை அடைந்து, சிறு சிறு சண்டைகளுக்கும் பெரும் பெரும் போர்களுக்கும் காரணமாகி பேரழிவில் முடிகின்றதாம்.
Write a comment