தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்து நான்காம் அதிகாரம்
வெகுளி
|
2.
|
சுடுசினம் உண்ணின் றொடரும் வெகுளி
அடைபுள் சினைபொரித் தற்று.
|
232
|
குறள் விளக்கம்
கோழியானது முட்டையை அடைகாத்துச் சூடுண்டாகிக் குஞ்சு பொரித்து வெளிப்படுத்துவதே போல், மனிதனின் மனமாகிய கோழி,புலன் உணர்வு என்னும் முட்டையை சினமெனும் சூட்டால் உள் வெதுப்பி, வெகுளி என்னும் குஞ்சை தேகேந்திரியத்தில் வெளியாகும்படி செய்கின்றதாம்.
முட்டையில் இயற்கையில் சீவச் சுடுகை இருக்கிறது. அதோடு கோழி அடை காத்தலால் உண்டாகும் செயற்கைச் சூடும் சேர்ந்து கோழிக்குஞ்சு வெளிப்படக் காரணமாயின.
இது போன்றே, புலனுணர்வின் அகத்தே சீவ போதமாகிய அகங்காரச் சூடு இயற்கையில் உள்ளது. அதனோடு, அகப்புற மனத்தில் உண்டாகும் சினச் சூடு செயற்கையாய்த் தாக்கி வெதுப்பி, வெகுளியைத் தோற்றுவிக்கின்றது காண்க.
நாளும் ஒரு தயவுக்குறள்-எண்.232.
Write a comment