Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.230.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்து மூன்றாம் அதிகாரம்.
பெருமிதம்.

10.
பெருமிதங் கொள்ளாதே பேரருளிற் றான்போய்
உருகியது வாதல் உயர்வு.
230

குறள் விளக்கம்
அருட்பெருங் கடவுள் உண்மையை அறிந்துகொண்டு, அதனையே அடைய ஒரே வேண்டுகையாகத் திருமுன் நிற்க, முடிவில் நாம் என்ற உணர்வும் தற்போத நிலை எல்லாமும் கரைந்து கடவுள் மயமாதல் அனுபவம்.
உண்மையில் உள்ள பதி ஒருவரே இருக்க, நாம் யார் இங்கு ? என விசாரம் செய்தால், “உண்மையில் உள்ளது அதுதான்” என்பதை அறிந்து கொள்ளாது, இதுவரை நாம், நாம் என்று அகங்கரித்துச் சொல்லிக் கொண்டது நம்மை நாம் அறியாமலேயாம் என்பது விளங்கும்.
அகங்காரம் ஒழிந்தபோது, நாம் என்பது அதுதான், என அறிகின்றோம்.
ஆகையால், இவ்வுலகில் பெருமிதங் கொண்டு அலைந்து கெடாது, அருள் உணர்விலே நாம் கரைந்து அதுவாகி விளங்குதல் ஒன்றே சிறப்புடையதாம்.