Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.229.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்து மூன்றாம் அதிகாரம்.
பெருமிதம்.

9.
மனமடக்கக் கற்றுபல மாசித்தி பெற்றும்
அனகமுறார்க் கில்லை அருள்.
229

குறள் விளக்கம்
மனத்தை ஓர்மைப் படுத்துவது ஒரு கலை. இதனால் அம்மனம் வலிமை அடைகிறது. பேராற்றல் உண்டாகிறது. இம்மனோ சக்தியை வளர்த்துக்க் கொண்டு, சாதாரண மனித தரத்திற்கு அப்பாற்பட்ட, அற்புதச் செயல்கள் புரிதல் கூடும். கண்டும், கேட்டும், அனுபவித்தும் அறிதற்கரிய சிபலவற்றைக் காணவு,ம், கேட்கவும், அனுபவிக்கவும் முடிகின்றது ஓர்மை மன ஆற்றலால்.
இம்மன ஆற்றலை நன்கு வளர்த்த அற்புத கன்ம சித்தர்கள், யோக சித்தி, ஞான சித்தி,கன்ம சித்தி, கல்பதேக காய சித்தி முதலியன பெற்று, செய்தற்கரியன செய்து, பெரும் புகழ் கொண்டார்கள். ஆனால், இவர்களெல்லாம் பூரண அருள் பெறவில்லை. பெறற்கான சுத்த சன்மார்க்கமும் அன்று தோன்றவில்லை
இது சமயம் சுத்த தயா சோதி தோன்றி உள்ளதால், யாவரும் தம் தம் சித்தி எல்லாம் அற்பமென அறியவும், அருட்பெரும்ப் பதியொடு இரண்டற்றிருந்து, சர்வ சித்தியோடு விளங்கவும், அனக வாழ்வு மலர்கின்றதாம்.
அனகம் = பாவ மற்றது, பொய்ப் பாவனை செய்து கொண்டிருக்காது, அகத்தே தயா ஒளியில் ஒன்றி நின்று கொண்டு, தயவை உயிர் உடம்பு உலகு எங்கும் விரித்து வழங்குதலாம். ஆகையால், இந்த அனக மார்க்கமே அருள் நெறி.