Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.228.


தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்து மூன்றாம் அதிகாரம்.
பெருமிதம்.

8.
தேவரொடு மூவருமே தேறரிய சுத்ததயை
மேவுநெறிக் காமே வியன்.
228

குறள் விளக்கம்
சுத்த தயா மார்க்கம், தனித்தலைமைப் பெரும்பதியாகிய தயாபெருஞ் சோதியையே முதலாகக் கொண்டது. இப்பதியின் ஏகதேச சக்தியே, ஆக்கல், காத்தல், அழித்தல் செய்யும் முத்தேவர்க்கும் மற்ற மற்ற பல்வேறு சக்தி சித்திகள் வாய்ந்த தெவ, சித்த, இருடிகணங்கட்கும், ஆதாரமாய் அகத்தும் புறத்தும் இருந்து ஆட்டி வைப்பதாம்.
எனவே, எத்தேவர்க்கும், சுத்த தயா சோதி பதியின் பூரண நிலை கிடையாது. அப்பேர்ப்பட்ட பதியை நாம் அறிந்து, சுத்த சன்மார்க்கத்தால் ஒன்று பட்டு, நாம் என்பது போய் அதுவாகி நிற்கும் அனுபவம் இது தருணம் பெறுகின்றோம். ஆதலின், இந்நெறியே மிகப் பெருமை கொண்டதாம்.