தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்து மூன்றாம் அதிகாரம்.
பெருமிதம்.
|
4.
|
நாமேன் தயவு நலஞ்செய்தல் வேண்டுமெனில்
நாமே தவர்செயலே நாட்டு.
|
224
|
குறள் விளக்கம்
நாம், இவ்வுலகில் பிறர்க்கு எதற்காக இரங்கி உதவி செய்தல் வேண்டும்? மற்றவர்கள் எப்படிப் போனால் நமக்கென்ன ? நாம் மட்டும் சுக செளக்கியத்தோடு இருந்தால் போதாதோ ? எனில்.
அது உண்மை அறியாமையாம். பெருமிதத்தால் பேசுகின்ற பேச்சு. உண்மை யாது எனில், சர்வ சீவ தயாபரராகிய கடவுள் ஒருவரே நாமாகிய எண்ணில் கோடி ஆன்மாவாகி இருந்து கொண்டு தயவினால் எல்லோரையும் வாழ்விக்கின்றார். ஆகையால், எல்லோரும் அவரே, எல்லார் செயலும் அவர் செயலே என்பவைதான் உண்மை.
இதை அறிந்து கொள்ளும்போது, அவரே நாமாயிருந்து பிறர்க்குத் தயவு செய்ய வேண்டிய கடமை விளங்குவதாம்.
Write a comment