தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்து மூன்றாம் அதிகாரம்.
பெருமிதம்.
|
3.
|
சர்வ சுதந்திர சச்சிதா னந்தபதி
கர்வமறச் செய்வான் கனிந்து.
|
223
|
குறள் விளக்கம்
மெய்ஞ்ஞானம் பழுக்காத மறம் (வீரம்) பேசும் மனிதன், தன்னியலைப் பற்றி செயலைப் பற்றி பெருமிதம் கொண்டு வாழ்ந்து அழிவதன்றி பெறும் பயன் யாதோ ?
எல்லாம் வல்ல சர்வசுதந்திரராகிய கடவுளே மனிதனையும் மற்றெல்லாவற்றியும் தோற்றுவித்து, ஆட்டி வைப்பதாலும்,. நம்மையும் அவர் தம் நிலைக்கே ஏற்றி வைக்கத் திருவுள்ளம் க்ண்டுள்ளார். அதனால் நாம் அவரிடத்திலே பூரண புகலடைந்து விட்டால், நம்முடைய தற்போதத் தடிப்பை ஒழித்து, தம்மையே நமக்குத் தந்து மகிழ்விப்பார்.
Write a comment