தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்து மூன்றாம் அதிகாரம்.
பெருமிதம்.
|
2.
|
புகழ்பட வாழ்ந்த புனிதர் களேனும்
மகிழ்ந்திலரே மாயாமை வந்து.
|
222
|
குறள் விளக்கம்
இவ்வுலகில், போற்றிப் புகழத்தக்க வாழ்க்கையைப் பெற்றிருந்தவர்களும் கூட, அந்த புகழை யெல்லாம் மண்ணில் விட்டுவிட்டுச் சென்று விடுகின்றனரே அல்லாது, இறவாமையுற்று இங்கு நிலவுகின்றார்களில்லை.
அப்புனித மனிதர்களுடைய வாழ்வும் எவ்வளவோ பெருமிதத்தோடு விளங்கிக் கொண்டிருந்தும், திடீரென்று மங்கி மறைந்து இல்லையாம்படி போவது கண்கூடு.
ஆதலின், அருள் திருவடியில் தாழ்ந்து பணிந்து அவ்வருளைப் பெற்று அழியாமை யுறுவதே பெருமை என்று அறிதல் வேண்டும்.
Write a comment