தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்து மூன்றாம் அதிகாரம்.
பெருமிதம்.
|
1.
|
திருவருளின் முன்நமது சிற்றியலை யெண்ணில்
பெருமித மிங்கென்னாம் பேசு.
|
221
|
குறள் விளக்கம்
அச்ச நிலையைக் கடந்து விட்டோம் என்று நினைந்து, பெருமை அடித்துக் கொண்டு அகங்கரித்தலே இப்பெருமித மெய்ப்பாடாக உள்ளதால், இது, அவ்வச்ச மெய்ப்பாட்டிற்கு அடுத்துள்ளதாம்.
கடவுளுடைய, எல்லாம் வல்ல திருவருட் பெருஞ்சக்தியின் முன்பு, மனிதனுடை சிறுமையும், மிகமிக அற்ப சக்தியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் எப்படி பொருந்தும் ?
மனிதன் தன்னுடைய ஆற்றலைப் பற்றி அகங்கரித்து பெருமிதம் கொள்ளல் எவ்வளவு அறியாமை !
அகங்காரம் ஒழித்துத் திருவருளில் அடைக்கலம் புகுந்தால் நம் சிறுமை நீங்கி கடவுட் பெருமையை நமது உரிமையாக வழங்கப் பெற்றுய்வோம்.
Write a comment