Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.220.

தயவுக் குறள் - உரை விளக்கம்.

சுவாமி சரவணானந்தா.

இருபத்தி இரண்டாம் அதிகாரம்.

அச்சம்.


10.

விசாரத் திருந்து வெரூஉ வதில்செய்(து)

உசாவரு மெய்கொண் டொளிர்.

230

குறள் விளக்கம்.

வெரு = அச்சம், வெரூஉ என நீட்டப்பத்ததின் கருத்து, தொடர்ந்து நீண்டு பிறவிகள் தோறும் சார்ந்து வருகின்ற பய சுபாவம் குறிப்பதாம்.

அந்த நெடும் பயத்தை ஒழிப்பது சத்விசாரம். இவ் விசாரத்திலிருந்து அகத்தில் தயா ஓர்மை வளர வளரத்தான் பயப் பிராந்தி சிறிது சிறிதாக விலகும்.

மற்றபடி படிப்பாலும், கேள்வி ஞானத்தாலும், அச்ச உணர்வு முற்றும் ஒழிப்படக் கூடாததாம்.

உசா அரு = ஆலோசித்து, விசாரித்துக் கேட்டறிதற்கு அரிய.