தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
அச்சம்
இருபத்திரண்டாம் அத்தியாயம்.
|
8.
|
அபயநிலை கண்டு அருண்முயற்சி செய்ய
உபயபத மேற்ற துயிர்.
|
218
|
குறள் விளக்கம்
மனிதன் அகத்தே அருண்மையும் புறத்தே புருண்மையும் ஏக காலத்தில் கண்டு உலகியலை அருளியலாக நடத்தத் துணையாகவே கடவுளின் இணையடிகளைப் பெற்றுள்ளான்.
அகத்தும் புறத்தும் நிறைந்த ஆண்டவர் சக்தியே, அவர்தம் உபயபதமாகத் துணையடியாக இணைந்துள்ளதாம். அகத்துள்ள அருள் திருவடியே அபயந்தந்து, அச்சம் போக்கி, ஆட்கொள்ளலால் அவணிருந்து அருள் நன்முயற்சிச் செயல் புரிதல் வேண்டும் என்றது.
“சபையன துளமெனத் தானமர்ந் தெனக்கே
அபய மளித்ததோர் அருட்பெருஞ் ஜோதி”
என்பது வள்ளல் வாசகம்.
Write a comment