தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்திரண்டாம் அத்தியாயம்.
அச்சம்
|
2.
|
தயாமய மான தலைவ னுறவே
பயானக மாற்றும் படை.
|
212.
|
குறள் விளக்கம்
அச்சமானது அக மனத்தில் அடங்கி இருந்து, அங்கிருந்தே புறக்கரணேந்திரிய தேகத்தில் காரியப்படுவதாம்.
ஆகையால் அவ்வச்சத்தை வேரோடு களைவதற்கு உள்ளுணர்விலே திடம் உண்டாக வேண்டும். இது, உள்ளத்துறையும் தயாசோதி வள்ளல் தொடர்பு உண்டானால் உண்மையாகக் கிடைக்கும். ஆகையால், நம் தயாபதியின் உறவே பயானகத்தை யொழிக்கும் படையாம்.
பயானகம் = பயம் அல்லது அச்சம்.
பயானகம் என்ற இச்சொல், அக மனத்திலிருந்தே அக்னகமுறுகின்ற உண்மையை உணர்த்திக் கொண்டதாகும்.
சுத்த சன்மார்க்க சாதகர் அச்சத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பர்.நமது திருவருட் பிரகாச வள்ளலும் “ஆகாரம் – அரை, நித்திரை – அரைக்கால், மைதுனம் – வீசம், பயம் – பூச்யம்” ஆகப் பெறுதல் வேண்டும் என்று கூறியுள்ளார்.
|
3. |
அழியா தொளிரும் அருண்மணியைக் ககொண்டார்க்(கு)
அழிவே யிலையென் றறி.
|
213.
|
குறள் விளக்கம்.
அருட்சோதியாகிய நம் பதி, நித்தியமாக நின்று ஒளிர்பவர். அவரைச் சார்கின்றவனும்,. நித்தியத்துவம் பெற்று விளங்குவான். கடவுட் சார்பு பெற்று,. அத்துவிதமாய் நிற்கும்போது, தனக்கு, எக்கலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், சிதைவில்லை என்ற உண்மையை உள்ளவாறு அறிந்த போது, எதற்கும், சிறிதும் அஞ்சாது நிற்கும் தைரியம் உண்டாகின்றது. இந்நிலையில்தான் சுத்த சன்மார்க்கி உலகில் என்றும் வாழ்வான்.
Write a comment