தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தோராம் அத்தியாயம்.
மருட்கை.
.
|
10.
|
தயாசெயல் கொண்டுடன் சாடுதல் ஒன்றே
மயாலுறா மைக்கு வழி.
|
210.
|
குறள் விளக்கம்:
காமாதிகளால் மருள் மயக்கம் அடையாதிருக்க வழி யாது எனில், அது தோன்றுமிடத்தே, உடனுக்குடன் மண்டையில் அடித்து, முளையிலே களைந்து ஒழிப்பதற்குத் தீவிரமாகத் தயவுச் செயலில் ஈடுபட வேண்டும்.
தயா இன்ப லட்சியத்தோடு, புற நாட்டம் விடுத்து, தயவுக் காரியம் புரியும் போது மையலுக்கு இடமுண்டாகாது. அது தோன்றினும் கணத்தில் மறையும்.
“சுத்த தயவுச் செயல்தான் மருட்கை ஒழிப்பது”. மற்ற எச்செய்கை புரிந்தாலும் அல்லது எது செய்யாதிருந்தாலும் பயன் உண்டாகாதாம்.
Write a comment