Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.208

தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தோராம் அத்தியாயம்.
மருட்கை.
தயவுக் குறள் எண்.208-உரை விளக்கம்.

8.
நிறையருளாற் பெற்ற நிலையான வின்பம்
மறைமருளாற் காணா மகற்கு.
208.

குறள் விளக்கம்.
அழியாத பேரின்பம், கடவுளின் பேரருளின் ஒன்றினாலே கிடைக்கக் கூடியதாய் உள்ளது. ஆதலின், சுத்த தயா நன் முயற்சி செய்து அதனைப் பெற வேண்டும்.
மற்றபடி மனித முயற்சியினால், தெளிவில்லாத வேதாகம சாத்திர அறிவைக் கொண்டு மட்டும் கடவுளின்ப வாழ்வைப் பெறுவது என்பது முடியாது.
மருளாகிய மயங்கொளி உணர்வுதான் மறையால் பெறலாகும் என்பதும், அதுவும், நிலையற்று மறைந்து போகும் என்பதும். “மறைமருள்” என்னும் சொற்களினால் குறிக்கப் படுகின்றன.