தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தோராம் அத்தியாயம்.
மருட்கை.
தயவுக் குறள் எண்.205-உரை விளக்கம்.
| 5. | பொருளாற் பொலியுற்றுப் பொங்குநிலை கண்ட
மருளால் மருவா மதி. |
205. |
குறள் விளக்கம்.
இவ்வுலகம் முற்றும் உருவப் பொருளால் விளங்குவது. அப்பொருளினிடத்து அழகுக் கவர்ச்சியால் மனம் ஈர்க்கப்பட்டு, உண்மை காணாத நிலை மருட்கை என்று இங்கு கூறப்படுகின்றது.
இம் மருட்சி கொண்ட உணர்வில் மதி ஒளியாகிய மெய்ஞ்ஞானம் திகழ்வதில்லை. ஆகையால், மனத்தில் தயா விசார நிலை விளங்கும் போதுதான் புறப்பொருளின் கவர்ச்சியறும். அகத்தில் அருண் மதி நிலவும்.
Write a comment