தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தொன்றாம் அத்தியாயம்.
இளிவரல்.
தயவுக் குறள் எண்.204-உரை விளக்கம்.
| 204. | வியன்கண் டறிவழிந்த மெய்யி னவச
மயநிலையே மாண்பில் மயக்கு. |
204. |
குறள் விளக்கம். வியன் – பெருமை, ஆச்சரியம்.
புறத்தே காண்கின்ற பெரும் வியப்புக் காட்சியால் மெய்யறிவு நிலை மறந்து, தன் தேக நிலையும் மறந்து தன் வசம் கெட்டு நிற்கும் இயல்பே, புகழற்கில்லாக் குற்றமுடைய மருட்கை எனலாகும்.
அவசம் = தன் வசப்படாமை, தன்னியல் மறந்த மயக்க நிலை.
பரவசம்=பக்தி முதலிய மனோ உணர்வால் உயர்நிலையில் தன்னை மறந்திருத்தல்.
மெய்யின் அவசமய நிலை = மெய்ப் பொருளின் உணர்வு கெட்ட மூட நிலையாம்.
சமயம் = என்பது மெய்ப்பொருள் உணர்வு.
வியப்பில் ஆழ்ந்து, அவசப்பட்டு மெய்ப் பொருள் உணர்வை இழந்து, நிற்றல் மருட்கை எனப்படுகின்றது.
Write a comment