Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக் குறள்-எண்.203.

தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தோராம் அத்தியாயம்.
மருட்கை

3.
புலமயக்கும் வாழ்க்கை புனிதமல பொய்யே
வலமழிக்கும் மாயா வழு.
203.

குறள் விளக்கம்.
பொய்யான, பரிசுத்தமில்லாத இந்திரிய சுகத்தைக் கொடுத்து உள மயங்கச் செய்யும் புற நெறி வாழ்வு நல்லதல்ல, அது நமது மெய் ஆற்றலை, அருள் அனுபவத்தைக் கெடுக்கும் பெருங்குற்றமுடையதாம்.
மாயா = என்பது பொய்மயமானது அல்லது அழியாதது.
அதாவது, புலனறிவை மயக்கி அவாவைப் பெருக்குகின்ற இந்த வழு, உடல் நீங்கினும் நீங்காது பல பிறவிகளிலும் தொடர்வதால் அழியாமை உடையதாய்க் கூறப்படுகின்றது.
மருட்கைதான் புலனறிவை மயக்குகின்ற மாயாத வழுவாகக் கூறப்படுகின்றதாம்.