Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்- குறள் எண்.199

தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபதாம் அத்தியாயம்.
இளிவரல்.
தயவுக் குறள் எண்.199-உரை விளக்கம்.

9.
வாரா திழிவொன்றும் வந்தாலும் நல்லாரைச்
சாராதே சாரும் அருட்டாள்.
199.

குறள் விளக்கம்.
நமது தயா வள்ளல் நமக்கு மேலான இன்ப நிலையை அருள்வதற்கே யாவும் வழங்கிக் கொண்டுள்ளார். இந்த உண்மையைத் தயவுக் கண்ணால் கண்டு கொள்பவர், தம்மைச் சாருபவை எல்லாம் கடவுளாணையால் வருபவை என்றும், அன்பும், அறிவும் அனுபவமும் வழங்குபவை என்றும் உணர்ந்து ஏற்பர்.
தயவாணையால், இழிவென்பது ஒன்றும் சாராது என்று நிச்சயமாக அறிவர். ஏதேனும் இழிவு நேர்வதாயினும், அதுவும் தம்மைத் திருத்தித் தூய்மைப் படுத்துவதற்கே. ஆதலின் அவ்விழிவு நம்மைச் சாருவதில்லை என்பது நல்லார் அறிந்திருப்பர்.