தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபதாம் அத்தியாயம்.
இளிவரல்.
தயவுக் குறள் எண்.197-உரை விளக்கம்.
| 7, | மானத்திற் கஞ்சும் மனிதனே யில்கடந்தார்க்(கு)
ஈனந்தா னுண்டோ இசை. |
197. |
குறள் விளக்கம்.
மன உணர்வு பக்குவமுறாத மாந்தரே, உண்மை விசார ஞானம் இல்லாததால், மானத்தைப் பெரிதாக மதித்து அதற்கு அஞ்சுவர்.
மாயா மனோ நிலை கடந்தவர்கள், யாவும் தயவுச் செயலாகக் கழ்ந்திருத்தலின், அவர்களுக்கு எதனாலும் இழிவு உண்டாவதில்லை,. இசை அல்லது புகழே உண்டாகும்.
இல் கடந்தார் = பந்தமற்றவர்கள்.
மனிதனே இல்கடந்தார் என்பதற்கு மனிதனே அல்லது மனிதத் தன்மையே இல்லாது தவறினவர்கள். இவர்கள் மக்கள் அல்லர். மாக்கள் (விலங்குகள்) எனப்படுவர். இம்மாக்களும், மானமும், ஈனமும் அற்றவர்களேயாவர்.
Write a comment