Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்..குறள் எண் 196

தயவுக் குறள்

சுவாமி சரவணானந்தா.

இருபதாம் அத்தியாயம்.

இளிவரல்.

தயவுக் குறள் எண்.196-உரை விளக்கம்.

6. மனவறிவு கொண்டு மயங்கி யிழியா

நினைவதி லன்பை நிறுத்து.

196.


குறள் விளக்கம்.

உள்ளத்தே அன்புணர்வு கலயாது இருத்தி, புறத்தும் அவ்வன்பு விளங்கச் செயல் புரிதல் வேண்டும். அப்பொழுதுதான் மன அறிவினால் மயங்கிப் பிறர்க்கு இழிதகவு செய்யாமையும், பிறர் தமக்கு இழிவு செயினும் அதற்காக மனம் உடைந்து, தாழ்ந்து வருந்தாமலும் இருக்கக் கூடும்.

மாயா உணர்வு நீக்காத மனத்தில்தான் இளிவரல் உணர்ச்சிக்கு இடம் உண்டாம்.