Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-குறள் எண் 194.

தயவுக் குறள்

சுவாமி சரவணானந்தா.

இருபதாம் அத்தியாயம்.

இளிவரல்.

தயவுக் குறள் எண்.194-உரை விளக்கம்.

4. குன்றுவ செய்து குவிக்கும் புகழ்பொருள்

நன்றன்று சேர்க்கும் நரகு.

194.

குறள் விளக்கம்

பிறரை இழித்துக் கூறி, அகமும் புறமும் குன்றச்செய்து, அதனால் தனக்குப் புகழும், பொருளும் மிகுதியாகக் கிடைப்பனவாயினும், அவைகளால் நற்பயனுண்டாகாதாம். அவைகள் கீழான நரகத்தையே அடைவிக்கும்.