தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா.
189 உரை விளக்கம்.
பத்தொன்பதாம் அதிகாரம்
| 9 | கண்ணீர்மை யாலுறுங் கண்ணீரே நன்மைதரும்
எண்ணீர்மைத் தேனைய விங்கு. |
189 |
கு.வி – கண்ணீர்மையாவது, கண்ணினது தன்மை. அது தயவு,. தாட்சண்யம். இதனால் உண்டாகும் கண்ணீர்தான்
நன்மை பயப்பதாம்.
மற்றவகையால் உண்டாகும் கண்ணீர் இழிதன்மை உடையதேயாம். அதனால் பெரிய நன்மை ஒன்றும்
உண்டாகாது. எனவே, அழு கண்ணீராயினும், ஆனந்தக் கண்ணீர் ஆயினும், தயவினால் தோன்றியதாக
இல்லையெனில் நன்மை பயக்காது என்று அறிதல் வேண்டும்.
Write a comment