தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா.
187 உரை விளக்கம்.
பத்தொன்பதாம் அதிகாரம்
அழுகை.
| 7 | அருள்பெறற் காகஅழுதிடுக வுள்ளத்
திருள்நீங்கப் பொங்குமே யின்பு. |
187 |
குறள் .விளக்கம்-
புறப் பொருளில் மிகப்பற்று வைக்காது, திருவருளே குறிக்கோளாகக் கொண்டு அதனனயே பெற வேண்டி உள்ளுருகி நின்றழுதால், நிச்சயமாக நமக்கு ஆறுதலும், அக விளக்கமும் கிடைக்கும். அகத்தொளி உண்டாக உண்டாக, அங்கிருந்து கொண்டு துன்பு செய்த அறியாமை இருள் விலகி, விலகி யொழிய, அருள் ஒளி ஆனந்தம் பெருக்கெடுக்கும்.
அருள் நெறி வேண்டி அந் நெறி நெல்வார்க்கு, அவ்வருளே அவர்கட்கு வேண்டுவன ந்ல்லாம் ஈந்து வாழ்விக்கும்..
Write a comment