Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினமும் ஒரு தயவுக் குறள் விளக்கம்-இன்றைய குறள்.186.

தயவுக் குறள்

சுவாமி சரவணானந்தா.

186. உரை விளக்கம்.

பத்தொன்பதாம் அதிகாரம்

அழுகை.

6 உரிமையிலா ஒன்றை யுறல்வேண்டிக் கண்ணீர்

சொரிவார்க்கீ தேற்றுமொரு சொல்.

186

குறள்.விளக்கம்.

அறியாமையினாலே, நமக்கு உரிமை இல்லாத ஒன்றைப் பெற வேண்டி மிக அழுது கண்ணீர் உகுப்பார்க்கு, அன்னார் அறிவுற்று, அமைதி பெற்று, நன்முயற்சி செய்து, வேண்டியதைப் பெற்றுமாறு தக்க மொழி கூறித் தேற்றல் வேண்டும்.

இங்ஙனம் தேறுதல் கூற வாய்ப்பும், சூழ்நிலையும் அமையாத போது உள நெகிழ்வோடு திருமுன் விண்ணப்பித்துக் கொள்வதே பொருந்தும்.