Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினமும் ஒரு தயவுக் குறள் விளக்கம்..இன்றைய குறள் 185.

தயவுக் குறள்

சுவாமி சரவணானந்தா.

185. உரை விளக்கம்.

பத்தொன்பதாம் அதிகாரம்

அழுகை.

5 அன்பினுவந் தேற்கா அழுதுபெறும் வன்பொருளால்

இன்பமுறல் பொய்யெனவே யெண்.

185


குறள் விளக்கம்.

ஒரு பொருளை அன்போடு கூடிய நன்னெறியால் அடைந்து அனுபவிப்பதால் உறும் இன்பமே உண்மையானது.

அப்படியல்லாது, பிறரைத் துன்புறுத்தி, மனம் சலிக்கச் செய்து அழுதுபெறுகின்றனவும் பலாத்காரமாய்க் கிடைக்கப் பெறுகின்றனவுமாகிய பொருள்களால் உண்டாக்க் கூடிய இன்பம் உண்மையல்ல. அது முதலில் இன்பம் போலத் தோன்றினும் முடிவில் பொய்யாய்ப் போம்.

அன்பில் என்றதில் “இன்’ என்பதற்கு “ஆல்’ என அதாவது அன்பினால் எனப் பொருள் படுவதாம்.