தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா.
த்லைப்பு - அழுகை
குறள் எண் 184-உரை விளக்கம்.
| 4 | ஏழையின் கண்ணீர்க் கிரங்கார்க் கிறையும்தன்
மாழை யுளங்கனியா மற்று. |
184 |
குறள் .விளக்கம்.
எதனாலோ துன்புற்று அழும் எளியாரைக் கண்டும் அல்லது கேள்விப்பட்டும், தயவால் உளங்கனிந்து அவர்களின் துன்பொழித்து இன்பு செய்ய நினையாதார்க்கு, கடவுள் திருவுள்ளமும் கனிந்து திருவருள் பாலிப்பதில்லை.
தயவோடு பிறர் துன்பத்தைத் தீர்த்து, மகிழ்வித்தால் கடவுள் அருளால், நமக்குத் துன்பம் ஒன்றும் நேராது. இன்பமே மேன்மேலும் ஓங்கும்.
மாழையுளம் = பொன்னான அழகிய கடவுள் உள்ளம்.
இது திருவுள்ளம் எனப்படுவதாம்.
Write a comment