Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினமும் ஒரு தயவுக் குறள் விளக்கம்..இன்றைய குறள் 183.

தயவுக் குறள்

சுவாமி சரவணானந்தா.

183. உரை விளக்கம்.

பத்தொன்பதாம் அதிகாரம்

அழுகை.

3 அறத்தான் மறத்தா னகமுறுதி கொள்ளார்

புறத்தழுவார் பொய்யுணர்ச்சி பூண்டு.

183


குறள் விளக்கம்.

சத்விசார உண்மையால் மன உறுதி கொண்டவர்கள் தயை பூண்டு இரங்கினும், கலங்கி அழுதுவிடார்கள். இதுபோல் மற வீரம் பூண்டோரும் மன உறுதியுவன் நிற்பர்.

இவ்விரு நிலையும் பெறாதவர்கள்தான், நொடியில் மாயா உணர்ச்சி வசப்பட்டு, மன மிகக் கலங்கி கண்ணீர் பெருக்குவர். மற வீரமும் அகங்காரத்தால் தோன்றிப் பின் மறைந்தொழிவதால், அறத்தினால் அருளடைந்து, அசையாத, அழியாத நிலையுறுதல் வேண்டும்.