தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா.
குறள் எண்.182 - உரை விளக்கம்.
பத்தொன்பதாம் அதிகாரம்
அழுகை.
| 2 | தயவிலார் பாரைத் தறுகணால் தாக்கிச்
செயலற் றழலச்செய்வார் தீர்த்து. |
182 |
குறள்.விளக்கம்.
தயவின்மையாலே வன் நெஞ்சர்கள் பிறரைத் தாக்கிக் கொடுமை செய்து அழ விடுகின்றார்கள். அப்படித் தாக்கப்படுகின்றவர்கள் மாட்டாமையாலும், ஆற்றாமையாலும் உளநொந்து அழுவதன்றி மற்றொன்றும் செய்ய முடியாது வருந்திக் கிடப்பர்.
இவ் ஏழை அழுத கண்ணீர் தயவில்லாரைக் கூரிய வாள் போல் சென்று தாக்கிச் செயலற்று அழச் செய்யும் மேலை நாளில்.
Write a comment